search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி விபத்து"

    செஞ்சி அருகே அரசு பஸ் பெண் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி(வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சி அருகே அரசலாபுரத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக அரசலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை சேத்துப்பட்டு பணிமனைக்கு சென்றுகொண்டிருந்த உழவன் எக்ஸ்பிரஸ் மீது, டீசல் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. #DieselEngine #UzhavanExpress
    சென்னை:

    சென்னையில் தென் மாவட்ட ரெயில்களின் பிரதான முனையமாக செயல்படுவது, எழும்பூர் ரெயில் நிலையம். எழும்பூருக்கு வரும் எல்லா ரெயில்களும் பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படியே, தஞ்சையில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்: 16866), பயணிகள் இறங்கி சென்ற நிலையில் அதிகாலை 5 மணியளவில் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணிமனைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருப்பதால், அந்த மார்க்கத்தில் எதிர்முனையில் வரும் டீசல் ரெயில் என்ஜின் ஒன்று அருகில் உள்ள வழித் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதாவது தண்டவாள இணைப்பு பகுதிக்கு (ஜாயிண்ட் பாயிண்டர்) சில அடி தூரத்தில் அந்த டீசல் ரெயில் என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



    குறிப்பிட்ட அந்த இணைப்பு பகுதியை உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கடந்து சென்றுகொண்டிருந்தது. இந்தநிலையில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடக்கும் முன்னரே, டீசல் ரெயில் என்ஜினை அதன் டிரைவர் இயக்கிவிட்டார். இதனால் எதிர்பாராதவிதமாக டீசல் ரெயில் என்ஜின், உழவன் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் ரெயிலின் எஸ்-9 பெட்டி சேதமடைந்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது. அதே நேரத்தில் மோதிய டீசல் ரெயில் என்ஜினும் சேதம் அடைந்தது.

    இந்த எதிர்பாராத விபத்து குறித்து உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். பின்னர் ரெயில்வே பணியாளர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஜாக்கி கருவிகள் மூலம் ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தூக்கி, தண்டவாளத்தில் நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து உழவன் எக்ஸ்பிரஸ் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விபத்துக்கு டீசல் ரெயில் என்ஜின் டிரைவரின் கவனக்குறைவே காரணம். உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவது தெரியாமல் அவர் டீசல் ரெயில் என்ஜினை இயக்கியுள்ளார். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்”, என்றார்.

    எதிர்பாராத இந்த சம்பவத்தால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கம்பன் உள்ளிட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தடைந்தன. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். 
    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயக்குவதற்காக 14 புதிய பஸ்கள் ஊட்டி கோட்டத்திற்கு வழங்கப்பட்டது. இதன் இயக்கத்தை கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குன்னூர் கிளைக்கு வழங்கப்பட்ட புதிய பஸ்களில் ஒன்று நேற்று குன்னூரில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் 52 பயணிகள் பயணம் செய்தனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் கே.என்.ஆர். நகர் இடையே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக சென்று எதிரே கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவையை சேர்ந்த பத்மாவதி (வயது 45), குன்னூரை சேர்ந்த உஷா (50), கரோலின் (50), சுந்தரி (60) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் சக பயணிகள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கும்மிடிப்பூண்டி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் லைலா லட்சுமி (வயது 53). இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி லைலா லட்சுமி, தனது தம்பி சிவாவுடன்(39) மோட்டார் சைக்கிளில் சோழவரத்தில் இருந்து எளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    புதுவாயல் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது, அதே திசையில் வந்த வேன் ஒன்று மேற்கண்ட மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லைலா லட்சுமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 
    விக்கிரவாண்டி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    விக்கிரவாண்டி:

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று நெல்லைக்கு புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரையை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருந்தார். அந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் உள்ள சென்னை- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்திச்செல்ல முயன்றார். இதில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் சென்னை அய்யப்பன் நகரை சேர்ந்த வாசுகி(25), குரோம்பேட்டை சசிகுமார், மாம்பாக்கம் அண்ணாமலை(30), கொளப்பாக்கம் பிரவின்குமார்(42) உள்ளிட்ட 10 பேர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த வாசுகி உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான அரசு பஸ் மற்றும் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    குமாரபாளையம் அருகே மினிலாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. வெப்படையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்டோர் நேற்று வேனில் குமாரபாளையத்தில் இருந்து புறப்பட்டனர்.

    அந்த வேன் காவடியான்காடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரே வந்த மினிலாரி மீது மோதி கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் மினிலாரியின் முன்பாகம் நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அய்யம்மாள் (வயது 60), சந்திரம்மாள் (63), கற்பகம் (52), மாரியம்மாள் (40), பெருமாயி (55), வள்ளியம்மாள் (52) ஆகியோர் பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த 10 பேர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
    திருச்சி:

    திருச்சி லால்குடி அபிஷேகபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் சந்திரன்(வயது 22). கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ்(21), கலாநிதிமாறன்(20). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு லால்குடியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதிக்கு சென்றனர்.

    அங்கு தங்கள் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு மீண்டும் லால்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்திரன் ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அருகே அவர்கள் சாலையின் வளைவில் திரும்பியபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் ஓடி சென்று படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி ஆனந்த்ராஜ் இறந்தார். கலாநிதிமாறனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×